உள்நாடுசூடான செய்திகள் 1

“கோட்டா தப்பிச் செல்லாமல் இருந்திருந்தால், இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார்”ரோஹித

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களை தனது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தியின் பலர் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு இணங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலில் நீண்டகால நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது மகிந்த ராஜபக்ச அவருக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அதனை எதிர்கொள்ளுமாறு மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவிடம் கூறினார். ஆனால், அவர் அதனை எதிர்கொள்ளவில்லை. போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றி கோட்டாபய ராஜபக்சவை விரட்டினர்.

அவர் தப்பிச் சென்றிருக்காவிட்டால், தற்போது உயிருடன் இருந்திருக்க மாட்டார். துறைமுகத்திற்கு சென்று கப்பலில் திருகோணமலைக்கு செல்லாமல் இருந்திருந்தால், அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக வழியில் ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டும். நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

நாட்டில் காணப்பட்ட நிலைமையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்திருந்தால், நாடு மயானமாகி இருக்கும். வேறு ஒருவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்திருந்தால், அவர் போராட்டகாரர்களின் கைதியாகி இருப்பார்.

அப்படி நடந்திருந்தால், போராட்டகாரர்கள் காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை முற்றாக அழித்திருப்பார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிதாக இராணுவத்தையோ பொலிஸாரையோ கொண்டு வரவில்லை. அதே இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரை பயன்படுத்தி போராட்டத்திற்கு பதிலளித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு