உள்நாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்.

(UTV |நுவரெலியா) –     இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் தனது 79வது வயதில் காலமானார்.

அதன்படி இன்று காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்த நுவரெலியாவை சேர்ந்த முத்து சிவலிங்கம் 1994 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அவர் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சராகவும், விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சராகவும், தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராகவும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள்

பசில் ராஜபக்ஷவுக்கான வர்த்தமானி வெளியானது [UPDATE]