வகைப்படுத்தப்படாத

ஆர்ஜென்டினா மற்றும் சவுதி அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்

(UTV | டோஹா ) –    சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள விளையாட்டுப் போட்டியான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930 ஆண்டிலிருந்து தொடர்ந்து 04 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது.

கடந்த முறை நடந்த போட்டி ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இப் போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது.

இன்றையதினம் குறித்த தொடரில் 04 போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி தற்போது C பிரிவில் ஆர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. D பிரிவில் இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு டென்மார்க் மற்றும் துனிசியா அணிகள் மோதுகின்றன. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மெக்சிகோ மற்றும் போலந்து அணிகள் எதிர்கொள்ளவுள்ளன. இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கடந்த போட்டியின் சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

Related posts

அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை

Fmr. Defence Secretary Arrested

கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு