உள்நாடு

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –   தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவினால் தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்வைத்த யோசனைக்கு நேற்று (21) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு மருந்துக் கொள்கை அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு கொள்கையை திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசு அங்கீகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

பாராளுமன்றம் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்படும்

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் அறிவிப்பு

லுனுகம்வெஹர வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு