உலகம்

இந்தனோசியா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி!

(UTV | கொழும்பு) –

இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்த வாரம்  ஏற்பட்டது.

மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுவருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த செங்கல் வீடுகளில் புதையுண்டவர்களைத் தேடினர். பல வீடுகளில், படுக்கையறைகளுக்குள் கான்கிரீட் மற்றும் கூரை ஓடுகள் விழுந்து கிடந்தன.

மதிய நிலவரப்படி 160 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்தார். நேரம் செல்லச்செல்ல மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.

இன்று இரவு நிலவரப்படி உயிரிழப்பு 160 ஆக உயர்ந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதிர்ச்சியாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

கனடா பிரதமர் தனது அனுதாபத்தினையும் தெரிவித்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தூதரகம்!

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் – கமலா ஹாரிஸ்.