உலகம்உள்நாடுவிளையாட்டு

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

(UTV | கொழும்பு) –   கத்தாரில் உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கவனம் பெற்ற ஒன்று நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் பேச்சு. அத்துடன்குர்ஆன் வசனங்களைக் கூறிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரும் கவனம் பெற்றார்.

அவரது பெயர் கானிம் அல் முஃப்தா. கத்தார் உலக கோப்பையின் தூதர் அவர் தான். குர்ஆன் வசனத்தை கூறிய பிறகு அதற்கானஆங்கில விளக்கத்தையும் கூறி அனைவரையும் வரவேற்றார் கானிம் அல் முஃப்தா.

உலகத்தின் பன்முகத்தன்மை, அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பண்பு ஆகியவற்றை வலியுறுத்துவதாக மார்கன் ஃப்ரீமன்கானிம் அல்முஃப்தா ஆகியோருக்கு இடையேயான உரையாடல் அமைந்திருந்தது.

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் குர்ஆன் வசனங்கள் மூலமாக நிகழ்ச்சிகள் தொடங்கியது இதுவே முதல் முறை என்றுவளைகுடா ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சியில் தோன்றியதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கானிம் அல் முஃப்தாவை பாராட்டும்வகையிலான ஏராளமான பதிவுகளைக் காண முடிகிறது

20 வயதான கானிம் அல் முஃப்தா Caudal Regression Syndrome எனப்படும் மரபு ரீதியிலான குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இந்தக் குறைபாட்டைக் கொண்டோருக்கு பிறக்கும்போதே உடலின் கீழ்பாதி பகுதி இருக்காது. சக்கர நாற்காலி மூலமாகவும், கைகளைத் தரையில் ஊன்றியபடியும் நடக்க வேண்டும்.

வயிற்றில் கருவாக இருந்தபோது கலைத்துவிடும்படி அவரது தாயிடம் பலரும் வலியுறுத்தியதாகவும், ஆனால் அவர் அதற்கு அவர்சம்மதிக்கவில்லை எனவும் கானிம் அல்முஃப்தாவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் இடது காலாகவும் நீங்கள் வலது காலாகவும் இருப்போம்என்று கானிமின் தாய் தனது கணவரிடம் கூறியதாகவும் அந்தஇணையதளம் குறிப்பிடுகிறது.

உடலில் குறைபாடு இருந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் தான் விரும்பிய துறைகளில் முன்னேறியதால் அவரது வாழ்க்கைமற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரபலமாகி இருக்கிறது.

இன்ஸ்டாகிராம், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவரை பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்இளம்தொழில்முனைவோரான அவர், காரிஸா என்ற பெயரில் ஐஸ் க்ரீம் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்

மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையளிக்கும் உரைகளை நிகழ்த்துகிறார். உடல் குறைபாடு இல்லாதவர்களுடன் கால்பந்து ஆடுவது, நீச்சல் போன்றவற்றிலும் கானிம் அல்முஃப்தா ஈடுபடுகிறார்.

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாகன விபத்தில் ஐவர் படுகாயம்

இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகாது

இன்றும் மழையுடனான காலநிலை