உள்நாடு

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து உலக வஙகியுடன் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –    இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில் இன்று (17) நிதியமைச்சில் இடம்பெற்றது.

நிதி அமைச்சர் ஷேஹான் சேமசிங்க,அமைச்சர் திளும் அமுணுகம மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் Hadad-Zervos ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

இச்சந்திப்பின் போது நாட்டின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு மேலும் நிதி கண்காணிப்பு மற்றும் கடன் மேலாண்மையை மேம்படுத்துதல்,வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல் , இறையாண்மை நிதித்துறை இணைப்பு மற்றும் முறையான அபாயங்களை குறைத்தல்,எரிசக்தி துறையை மேம்படுத்துதல், மற்றும் கார்பனை குறைத்தல்,SOE களை மறுசீரமைத்தல் மற்றும் விலக்குதல்.கொள்கை நிச்சயமற்ற தன்மையை குறைத்தல் மற்றும், பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை அதிகரித்தல் போன்ற வற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் மூலதனம் மற்றும் பிராட்பேண்ட் சந்தையில் போட்டி மற்றும் சமூக பாதுகாப்பு நிறுவனங்கள், விநியோக அமைப்புகள் மற்றும் இலக்குகளை வலுப்படுத்துதல் போன்றவற்றை பற்றியும் பேசப்பட்டது.
இச்செயலமர்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் லைன் நிறுவனங்களின் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் பின்னர், உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris Hadad-Zervos மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இவ்விடயங்கள் குறித்து விளக்கமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மத்திய வங்கியால் நிறுத்தம்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

பெளர்ணமி தினத்தில் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி மறுப்பு