உள்நாடுசூடான செய்திகள் 1வகைப்படுத்தப்படாத

“போலி ஆவணம் மூலம் பாராளுமன்றிற்கு வந்த வெளிநாட்டு பெண்” நடவடிக்கை அவசியம் – முஜீபுர் ரஹ்மான்

(UTV | கொழும்பு) –

வெளிநாட்டுப்பிரஜையான பெண் நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக நாடு கடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பிரஜை அல்லாத அந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மிரிஹான தடுப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடு கடத்த வேண்டும்.

குறித்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டுப்பிரஜையாக இருந்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணை நடத்தி புதுக்கடை நீதிமன்றத்தில் வழக்கையும் தாக்கல் செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் 2014 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட வதிவிட விசா அனுமதியில் இலங்கையில் தங்கி இருக்கின்றார்.

அத்துடன் அவருக்கு வழங்கப்பட்ட வதிவிட விசா அனுமதி 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் காலாவதி ஆகி விட்டது என குற்றவியல் விசாரணை திணைக்களம் தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தெளிவாக இந்த விசாரணை அறிக்கையை மூடி மறைத்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நடத்தி இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜெயலலிதா வீட்டில் கொலை!..ஒருவர் படுகாயம்…பெரும் பரபரப்பு

‘நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து யோசித்து ஒரு முடிவை எடுத்தேன்’

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்