(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்குள் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சிப் பிரிவு எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் மூலம் உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.
உள்ளூராட்சிப் பிரிவுகளின் எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 20ஆம் திகதி நடத்த முடியாது என பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி அதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தமது ஆணைக்குழுவினால் மேட்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.