உள்நாடு

ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று இன்று கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் முக்கியமாக சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய கட்சி நியமனங்கள் குறித்தும் இன்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், தேர்தலில் போட்டியிடுவதற்கு பரந்த கூட்டணியை உருவாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பரந்துபட்ட கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

Related posts

அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன – பியல் நிஷாந்த.

சஜித்துடன் இணைந்த சேவ லங்கா மஜீத் – பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக நியமனம்

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு