உள்நாடு

டெங்கு தொற்றுநோய் நிலைமை பற்றிய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் நுளம்புகளின் அடர்த்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் டிஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 42 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

விவசாய அமைச்சின் கீழ் லங்கா போஸ்பேட் நிறுவனம்

ஆசிரியர் சேவைக்கான நேர் முகப்பரீட்சை ஒத்திவைப்பு

ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 665 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்!