உலகம்

ஜி-20 மாநாட்டினை புறக்கணித்த ரஷ்ய ஜனாதிபதி

(UTV |  ரஷ்யா) – உக்ரைன் போரால் அமெரிக்கா-மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு ஜி-20 நாடுகள் மாநாடு வருகிற 15, 16ம் திகதி, இந்தோனேசியாவின் பாலி தீவில் நடக்கிறது.

இதில் உலக தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளார்கள். ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்தோனேசியாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியாவை புறக்கணிக்க வேண்டும் என்று கோரின.
ஆனால் அதை இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஏற்க மறுத்தார். அனைத்து உறுப்பினர்கள் இடையே ஒருமித்த கருத்து இல்லாமல் அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தோனேசிய அதிபர் ஜோகோவுடன் ரஷிய ஜனாதிபதி புதின் தொலைபேசியில் பேசினார்.

இதுதொடர்பாக ஜோகோ விடோடோ கூறும்போது, ‘பாலியில் நடக்கும் ஜி-20 மாநாட்டை ரஷிய ஜனாதிபதி புதின் தவறவிடக்கூடாது.

அவருடனான உரையாடலின்போது மாநாட்டில் புதின் கலந்துகொள்ள மாட்டார் என்ற வலுவான அபிப்ராயத்தை ஏற்படுத்தி உள்ளது. உச்சி மாநாட்டில் பங்கேற்ற ரஷியா தொடர்ந்து வரவேற்கப்படுகிறது.

ஜி-20 ஒரு அரசியல் மன்றமாக இருக்கக்கூடாது. இது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை பற்றியது’ என்றார். ஜி-20 மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் – ஈரான்

ஈரான் – ஈராக் – அமெரிக்க போன்ற நாடுகளுக்கிடையில் பதற்ற நிலை [VIDEO]

“எங்கள் ஆயுதங்களை நாம் கீழே இறக்க மாட்டோம்” – உக்ரைன்