உள்நாடு

A/L, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில்  மாற்றம் இல்லை 

(UTV | கொழும்பு) –   உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையிலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

டிசம்பரில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைக்கு தோற்றும் பிள்ளைகளிடம் இருந்து நிறைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் பொதுப் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்ததாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் மீண்டும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அதற்குத் தயாராவதற்கு மூன்று மாதங்களும் ஒரு வாரமும் குறுகிய கால அவகாசம் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

கொவிட் 19 நிலைமை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் மற்றும் ஒன்பது மாகாணங்களின் பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பான கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பொருத்தமான ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.

இந்த அனைத்து உண்மைகளையும் கருத்திற் கொண்டு தற்போது நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கால நீடிப்பு தொடர்பில் எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

சீனவுக்கு குரங்குகள் கொடுக்க இணக்கம்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு