உள்நாடு

கடன் தவணைகள் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரிடம் முறைப்பாடு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்க முயற்சிப்பதால், கடனாளிகள் தாங்க முடியாத அளவுக்கு கடன் தவணைகள் அதிகரித்துள்ளதாக சமூக சக்திக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சுதேஷ் பிரசன்ன ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

இதனால் சில கடனாளிகள் தமது உயிரையும் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி சுதேஷ் பிரசன்ன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கடன் கொடுத்தவர்களுக்கு நிவாரணத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான மகஜர் ஒன்றையும் அவர் மத்திய வங்கி ஆளுநரிடம் கையளித்துள்ளார்.

Related posts

சீனத் தடுப்பூசிகள் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு

காஸா சிறுவர் நிதியத்துக்கான நிதி பற்றி ஐ.தே.க வின் வேண்டுகோள் !

கொரோனாவிலிருந்து 130 பேர் குணமடைந்தனர்