உள்நாடு

பல பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஐந்து பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் இனிப்புகள், சாக்லேட்கள், பிஸ்கட்கள், கேக் மற்றும் வாசனை சோப்புகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில், குறித்த இறக்குமதியாளரால் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரகடனப்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை பொருட்கள் தீவுக்குள் நுழையும் இடத்தில் ஆங்கிலத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

Related posts

வெலிமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அரச அனுசரணையில் இறுதி சடங்கு

எதிர்வரும் 20ம் திகதி – புதிய அரசின் கொள்கைப் பிரகடனம்

திங்கள் முதல் அதிவேக ரயில் சேவைகள்