(UTV | கொழும்பு) – பிரச்சினைகளுக்கு அஞ்சாமல் நாட்டின் சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பல்வேறு பொய்யான பிரசாரங்களை அனுப்பி மக்களைத் தூண்டிவிடுபவர்கள் நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரமாட்டார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
“பைத்தியக்காரர்கள் கலங்கினாலும் சரித்திரம் கலங்கவில்லை” என்பது பழைய கதை என்பதை பலவிதமான பொய்ப்பிரச்சாரங்களை பரப்பும் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
புத்தளம் ஆராச்சிக்கட்டில் நேற்று (27) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.