விளையாட்டு

கிரிக்கெட்டிற்கு தற்காலிக ஓய்வினை வழங்கினார் பினுர

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ கிரிக்கெட்டில் இருந்து சிறு ஓய்வு எடுக்கவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

பினுர பெர்னாண்டோ விடுத்துள்ள குறிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதன் மூலம் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக பினுர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வலுவாக மீண்டும் களம் இறங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

தனது இயலாமையை சமூக வலைதளங்கள் மூலம் கேலி செய்ததற்கு வருந்துவதாகவும் பினுர கூறுகிறார்.

கையில் பச்சை குத்திக் கொள்ளாவிட்டாலும், தான் ஒரு சிறந்த பௌத்தர் என்றும், தன்னை அவமதிக்கும் அனைவரும் நலம் பெற வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பினுர பெர்னாண்டோ காயமடைந்தார்.

இதனால், இந்த ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

இதன் காரணமாக அவரை மீண்டும் இலங்கைக்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Related posts

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் முதலில் மோதவுள்ள அணிகள்…

நான்காவது முறையாக CSK சாம்பியன்

பங்களாதேஷை வீழ்த்திய இங்கிலாந்து அணி