உள்நாடு

நாடு முழுவதும் இபோச பேருந்துகள் வேலை நிறுத்தம்?

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஊழியர்கள் மீது தனியார் பேரூந்து உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களின் ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி டிப்போவில் கண்டிக்கும் இரத்தினபுரிக்கும் இடையில் ஓடும் பேருந்தின் நடத்துனர் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் தொடர்பான சட்டம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரியவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இரத்தினபுரி டிப்போவில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல்கள் தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து டிப்போக்களுக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மைத்திரியின் வாக்குமூலம் AGக்கு அனுப்பிவைப்பு!

பாடசாலை போக்குவரத்து வாகனங்களது கட்டணங்களும் உயர்வு

பாராளுமன்றம் காலை கூடியது