(UTV | கொழும்பு) – 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பலில் இருந்து இன்று (26) நிலக்கரி இறக்கும் பணி நடைபெறும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலக்கரி இருப்பு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலக்கரி ஏற்றிச் செல்லும் மேலும் 05 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, லக் விஜய அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தத்தை டுபாயில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி ஓமல்பே சோபித தேரர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்த மனுவில், இலங்கை நிலக்கரி நிறுவனம், அமைச்சர்கள் குழு, கொள்முதல் குழு உறுப்பினர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் என 49 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இலங்கை நிலக்கரி நிறுவனம் 4.5 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அதனை துபாய் அரசின் கருமணல் பொருட்கள் நிறுவனத்திற்கு வழங்கவும் தீர்மானித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெண்டர் நடைமுறைக்கு எதிராக இந்த டெண்டர் வழங்க தயாராகி வருவதாகவும், அது சட்டவிரோதமானது என்றும், அந்த டெண்டரை செல்லுபடியாகாத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சோபித தேரர் மனு தாக்கல் செய்திருந்தார்.