உள்நாடு

“ஜூலை 9-ம் திகதி தொடங்கிய படத்தின் முதல் சீசன் இன்னும் முடிவடையவில்லை”

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, அரசாங்கத்தின் பொறிமுறையை அடுத்த சில மாதங்களில் மாற்றியமைக்க வேண்டும் என, zoom ஊடாக நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

வங்கிகளை பலப்படுத்தும் வகையில் மறுசீரமைப்புச் செய்வதே முதலில் செய்யப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் பல வர்த்தகங்களை திவால் நிலையில் இருந்து அகற்ற முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இங்கு ஜனாதிபதி அண்மையில் திரைப்படம் ஒன்றைப் பார்த்தாரா என ஊடகவியலாளர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, ஜூலை 9ஆம் திகதி முதல் நாட்டில் திரைப்படம் ஒன்று இருப்பதாகவும், அது பல பாகங்களைக் கடந்துவிட்டதாகவும், முதல் சீசன் இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Related posts

கடன் தவணைகள் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரிடம் முறைப்பாடு

வாழைப்பழங்கள் விலை அதிகரிப்பு

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது