உள்நாடு

சட்டவிரோதமான முறையில் ஆஸி செல்ல திட்டமிட்ட 45 பேர் கைது

(UTV |  காலி) – சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குறைந்தது 45 பேர் உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ஹபராதுவ பொலிஸில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களினால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பிடிபட்டவர்களில் ஏழு பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவர்.

அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான நம்பிக்கையில் குழு கிட்டத்தட்ட ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் தங்கியிருந்தது.

இவர்கள் நேற்று வவுனியாவில் இருந்து பஸ்ஸில் ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

அவர்கள் இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

மௌலவியின் கருத்து – போராட்டத்தில் மாணவிகள்.

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை