உள்நாடு

முச்சக்கர வண்டிகளுக்கு ஒக்டேன் 87 பெட்ரோல்

(UTV | கொழும்பு) – இலங்கையில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஒக்டேன் 87 எரிபொருளை பயன்படுத்துவது தொடர்பில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கான பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு அண்மையில் (19) பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.

இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தொழிற்சாலைகளை பேணுவதற்கும் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துவதற்கும் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு இணையான நிலையான மற்றும் நியாயமான மதிப்பில் மின்சாரக் கட்டணத்தை பேண வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியது.

அதிக தேவை இருக்கும் நேரத்துக்கும் குறைந்த மின்சாரத் தேவைக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவது குறித்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன, மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட பல ஆய்வுகள் குறித்து அறிஞர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு எவ்வாறு சிறந்த மற்றும் திறமையான பங்களிப்பை வழங்குவது என்பது குறித்த யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் தேசிய பேரவையில் முன்வைக்கப்படும் என்று தலைவர் கூறினார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 10 வேட்பாளர்கள்

பூஜித் – ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

பிரதமர் சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை