உள்நாடு

நாளை 12 மணி நேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –   நாளை (21) காலை களுத்துறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் காலை 8.30 மணி முதல் மாலை வரை 8.30 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

மேலும், நாகொட, பொம்புவல, பிலமினாவத்தை, பயாகல, மக்கொன, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

BREAKING NEWS : உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் ஊரடங்கு

யாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை