உள்நாடு

விமான பணிப்பெண்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – விமானப் பணிப்பெண்களாக ஆட்சேர்ப்பு செய்யும் போது தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், விமானப் பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு திருமணமாகாதவராக இருப்பதே குறைந்தபட்ச தகுதியாகும்.

“இருப்பினும், சேவையில் இருக்கும் விமானப் பணிப்பெண்களுக்கு இது பொருந்தாது. தங்கள் திருமண நிலையை மறைத்து விமானப் பணிப்பெண்களாக ஈடுபட்டுள்ள ஊழியர்கள் குறித்து நிறுவனம் அறிந்திருக்கவில்லை. தவறான தகவலை வழங்கிய விண்ணப்பதாரரும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதற்கேற்ப நடைமுறைகள் மற்றும் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.”

Related posts

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி!

O/L பரீட்சையில் அதிரடி மாற்றம் – கல்வியமைச்சு

8 பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!