உள்நாடு

வெள்ளியன்று 12 மணி நேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை (வடக்கு/தெற்கு), நாகொட, போம்புவல, பிலமினாவத்தை, பயாகல, மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

UPDATE – லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

IMF ஒப்பந்தம இப்போதைக்கு அவசியம் இல்லை

இன்று திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் இடம்பெறாது