(UTV | கொழும்பு) – இன்று தேர்தல் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘ஒன்றிணைந்து நிற்போம்’ என்ற தொனிப்பொருளில் பொதுஜன பெரமுன நேற்று(16) நாவலப்பிட்டியில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“எங்களிடமும் தவறுகள் உள்ளன. நாங்கள் அதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறோம். ஆனால் தவறு செய்துவிட்டோம் என்று கூறும் எவரும் வரலாற்றில் தவறு செய்யாதவர் இல்லை. தவறு நேர்ந்தால், அதைத் திருத்த வாய்ப்பு உள்ளது.
பொதுவான உடன்படிக்கைக்கு வருமாறு கேட்டால், அது தவிர்க்கப்படுகிறது. சிலர் நம்மை மட்டும் குறை கூறுகின்றனர். அவர்கள் பொறுப்பல்ல. அவர்கள் நாட்டை உருவாக்க விரும்பவில்லை. நாட்டை தீயில் கொளுத்துபவர்கள். எனவே மக்களைத் தூண்டி விடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
எங்களுக்கு எதிராக இந்த நாட்டில் ஒரு பிரிவினர் இருப்பதை நாங்கள் அறிவோம். இன்றும் பொதுத் தேர்தல் வந்தால் வெற்றி பெறுவோம். அது உண்மை. இன்று நாடு முழுவதும் சுற்றி வருகிறோம். இந்த நிலையை நாம் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற பிரேரணையை முழு நாடும் கேட்கட்டும்..”