உலகம்

வெனிசுலா நாட்டில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

(UTV | லாஸ் டெஜீரியாஸ்) – வெனிசூலாவில் தொடர் மழை காரணமாக தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள லாஸ் டெஜீரியாஸ் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 56 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. லாஸ் டெஜீரியாஸில் 300க்கும் மேற்பட்ட வீடுகள், 15 வணிக நிறுவனங்கள் மற்றும் ஒரு பள்ளி முற்றிலும் அழிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிய வீடுகள் வழங்கப்படும் என்று கூறிய அவர், அந்த நகரம் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வரும் என்றும், யாரும் கைவிடப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது- ஜீ ஜின்பிங்

முதன்முறையாக ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய 460 திமிங்கலங்கள்

கேரள தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மிரட்டல்!