(UTV | கொழும்பு) – இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் பாலை இறக்குமதி செய்வதில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கையில் தென்னை தொடர்பான கைத்தொழில்களுக்கு இது தொடர்பான இறக்குமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், அதற்கமைய, தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் தொழில்முயற்சியாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு, வங்கிக் கடன்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவது குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டியதன் அவசியம் தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் வர்த்தக அமைச்சருக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தூதுவருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.