உள்நாடு

‘நிலுவைத்தொகை செலுத்தப்படாவிடின் விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறாது’

(UTV | கொழும்பு) –   கடந்த உயர்தர மற்றும் பொதுப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு செலுத்த வேண்டிய ஒரு மில்லியன் பதினைந்து ரூபாவை இம்மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாவிட்டால் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட கடமைகளை இவ்வருடம் ஏற்கப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களம் தற்போது கோரியுள்ளதுடன், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இம்மாதம் 21ஆம் திகதி கடைசி நாளாகும்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த பரீட்சைகளில் விடைத்தாள்களை மதிப்பிடுவதில் அதிபர்களும் ஆசிரியர்களும் பெரும் தியாகங்களைச் செய்ததாகவும், தமது சொந்தச் செலவில் அச்செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிலுவையிலுள்ள கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் பரீட்சைகள் நிச்சயமற்றதாக அமையும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவிக்கின்றார். அத்துடன் பரீட்சைகள் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் நிலைமை தவிர்க்க முடியாதது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாம் வினவியபோது, பதிலளித்த பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர், இந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தேவையான பணம் திறைசேரியில் இருந்து பெறப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

Related posts

வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு

பாப்பரசரை சந்திக்கின்றார் கொழும்பு பேராயர் மல்கம்

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 21 மணித்தியால நீர் வெட்டு