உள்நாடு

ஞாயிறு போராட்டம் : ஒரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

(UTV | கொழும்பு) – கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தை பொலிஸார் கலைத்ததன் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 09ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் கொண்டாட்டம் பொலிஸாரால் கலைக்கப்பட்டது.

இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், சட்டவிரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலதிகாரிகளை திருப்திப்படுத்துவதற்காக சட்டவிரோத நடவடிக்கைகளில் மக்களின் உரிமைகளை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தவறுகளுக்கு எவ்வாறு விலை கொடுக்க நேரிடும் என்பதை தான் பார்த்துள்ளதாக சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி தாமதமானாலும் அது நிச்சயம் நடக்கும் என சாலிய பீரிஸ் தனது முகநூல் பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மேலும் 480 பேர் பூரணமாக குணம்

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவுக்கு

கடந்த 24 மணிநேரத்தில் 189 பேர் கைது