உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் உயர்வு

(UTV | கொழும்பு) – புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை புதிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றுதல் ஆகியவற்றுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

இதன்படி, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பொது சேவை மற்றும் ஒரு நாள் சேவைக்கு செலுத்த வேண்டிய புதிய கட்டணங்கள் குறித்தும் உரிய வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய 29 பேர் கைது

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.

SSP ரொமேஷ் லியனகே பணி இடைநீக்கம்