உள்நாடு

‘மக்கள் நடைமுறை தீர்வுகளையே விரும்புகிறார்கள்’

(UTV | கொழும்பு) –   சுற்றறிக்கை திட்டங்களை விட நடைமுறை தீர்வுகளையே மக்கள் விரும்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளூராட்சி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுராட்சி மற்றும் தலைமைத்துவத்தின் உலகளாவிய சவால்கள் என்ற தலைப்பில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச மாநாட்டில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் உடனடியாக பலனளிக்கும் முடிவுகளை விரும்புகிறார்கள், சிக்கலான திட்டங்கள் அல்ல. பங்கேற்பு ஜனநாயகத்தின் ஊடாக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவது உள்ளூராட்சி மட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் முதன்மையான பொறுப்பாகும்.

உள்ளூராட்சி மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அறிவு இன்றைய காலத்தில் இன்றியமையாதது, அதை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அரசின் விருப்பம்.

உலகை வெல்வதற்கு, கிராமத்திற்கு தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தை விரைவுபடுத்துவது அவசியம்.

தகவல் தொழில்நுட்பத்தை கிராமத்திற்கு கொண்டு செல்வதில் உள்ளூராட்சி பிரதிநிதிகள் விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அரச சபையின் காலத்திலிருந்து நாட்டில் கிராமிய மட்ட நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டாலும், அது இலங்கைக்கு புதிதல்ல. அநுராதபுர காலத்திலும் கிராமிய நிர்வாகக் கட்டமைப்பு இருந்தமைக்கு வரலாறு சான்று பகர்கிறது.

இதை இன்றைய காலக்கட்டத்தில் மேம்படுத்தும் சவால் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு விடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமும் மக்களின் அழுத்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதே என பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

கொரோனா வைரஸ் – குணமடைந்து வரும் சீன பெண்ணின் உடல் நிலை

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி