உலகம்

புளோரிடாவை உலுக்கிய இயான் புயல் – பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

(UTV |  வாஷிங்டன்) – அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது.

புயல் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார். இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரித்துள்ளது. தேச வரலாற்றில் மிக மோசம் என்ற அளவிலான தரவரிசையில் இந்த சூறாவளி புயல் இடம் பெறும். நாட்டைக் கட்டமைக்க சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகும். இது புளோரிடாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் புதன்கிழமை புளோரிடா செல்ல உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related posts

எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

சுமார் 300க்கும் மேற்பட்ட தடுப்பூசி நிலையங்கள்

உணவுக்காக குழந்தைகளை விற்கும் அவலம்