உள்நாடு

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வரி

(UTV | கொழும்பு) – கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று (1) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இம்மாத தொடக்கத்தில், சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி மசோதா, திருத்தங்களுடன், 81 வாக்குகள் பெரும்பான்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கடந்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதற்கான அனுமதியை வழங்கினார்.

இதன்படி, 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருடாந்த வருவாயைக் கொண்ட இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோருக்கு இந்த வரி விதிக்கப்படும்.

புதிய வரியின் மூலம் அரசாங்கம் 140 பில்லியன் ரூபாவை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டிய சமூக குழுக்களை கவனித்துக்கொள்வதற்கு இந்த வரிகள் நிதி திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இன்றைய தினம் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை

அன்று ஹிட்லர் செய்ததும் தவறுதான் – இன்று இஸ்ரேல் செய்வதும் தவறுதான்.