உள்நாடு

நாடளாவிய ரீதியாக பெட்ரோல் நிலையங்களில் இருந்து எரிபொருள் மாதிரிகள் பரிசோதனைக்கு

(UTV | கொழும்பு) –   நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விற்பனை செய்யப்படும் எரிபொருளின் தரத்தை பரிசோதிப்பதற்காக மாதிரிகளை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆலோசகர் சிறில் சுதுவெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக எரிபொருளை வெளியிட நடவடிக்கை எடுத்ததன் காரணமாக பெட்ரோலிய நியதிச்சட்ட கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொழும்பு 07 பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஒக்டேன் 92 ரக பெட்ரோலை வழங்கும் 3 பம்புகளில் இரண்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் ஒக்டேன் 92 லீற்றர் 1.2 வீதமான பெட்ரோல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெட்ரோலில் 5 ரூபா 40 காசுகள் குறைக்கப்பட்டு, அதனடிப்படையில் இரண்டு எரிபொருள் பம்புகளில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை வந்தடைந்த டீசல் கப்பலுக்கான கொடுப்பனவுகளை அடுத்த வாரத்திற்குள் செலுத்தவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த டீசல் கப்பல் 10 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கைக்கு நேற்றுமுன்தினம் வந்த பெட்ரோல் கப்பலுக்கு பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 20ஆம் திகதி இலங்கை வந்த கச்சா எண்ணெய் கப்பலுக்கு புதிய முறையின் மூலம் பணம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி வரையறை நீக்கம்

மிச்செல் பெச்சலட் இன்று வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார்