உள்நாடு

இலங்கைக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியது

(UTV | கொழும்பு) –   இலங்கை மக்களுக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ரோமில் உள்ள ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

தூதுவர் சின்டி மெக்கெய்னும் நேற்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் தாம் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை நடத்தியதாக தூதுவர் மக்கெய்ன் தெரிவித்தார்.

உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதன் மூலம் இலங்கையில் உள்ள விவசாயிகள் முக்கிய விவசாய உற்பத்தியை புத்துயிர் பெறுவதற்கு உரங்களை பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தூதுவர் மெக்கெய்ன் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் செல்வதற்கு முன்னர் தூதுவர் சின்டி மெக்கெய்ன் அவர்களுடன் கலந்துரையாடினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி மற்றும் சிண்டி மெக்கெய்ன் கலந்துரையாடினர்

நாட்டில் நிலவும் நிலைமை குறித்து தூதுவர் மெக்கெய்னுடன் அரச தலைவர் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே தனது முன்னுரிமை என ஜனாதிபதி விக்கிரமசிங்க விளக்கமளித்திருந்தார்.

இலங்கையர்கள் மீது நிலவும் பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் குறித்தும் இரு கட்சிகளும் விவாதித்ததுடன், அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயல்படும் பல வழிகளை ஆராய்ந்தன.

Related posts

மாளிகாவத்த சம்பவம்; 7 பேருக்கு விளக்கமறியல்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

ஜனாதிபதி அநுர கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்தார்.

editor