விளையாட்டு

BPLக்கு 7 அணிகள்

(UTV |  பங்களாதேஷ்) – பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் அடுத்த மூன்று கட்டங்களில் ஏழு அணிகள் பங்கேற்கும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், போட்டியின் முந்தைய கட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பசுந்தரா குழுமத்தின் ரங்பூர் அணியும் மீண்டும் போட்டியில் பங்கேற்கிறது.

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் 2023-2025 சீசனுக்கான அணிகளில் சேர டெண்டர்களை அழைத்த பிறகு, ஆர்வமுள்ள ஒன்பது தரப்பினர் ஏழு அணிகளுக்கு தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

மேலும், போட்டிகள் 2023 ஜனவரி 5 முதல் பிப்ரவரி 16 வரையிலும், 2024 போட்டிகள் ஜனவரி 06 முதல் பிப்ரவரி 17 வரையிலும், 2025 போட்டிகள் ஜனவரி 01 முதல் பிப்ரவரி 11 வரையிலும் நடைபெறும்.

பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசனின் மொனார்க் ஹோல்டிங் நிறுவனமும் இந்த வருடப் போட்டிக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்த போதிலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

போட்டியின் அணி உரிமையாளர்கள், Fortune Barishal Sports Ltd (Barishal), Mindtree Limited (Khulna), Progoti Green Auto Rice Mills Ltd (Dhaka), Future Sports Bangladesh Limited (Sylhet), Bashundhara Group’s Toggi Sports Limited (Rangpur), Delta Sports Ltd (Chattogramm), Comilla Legends Limited (Comilla).

Related posts

ஐரோப்பிய லீக் தொடர் கேள்விக்குறி?

நியூசி.டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்

உலக கோப்பை கால்பந்து போட்டியை டூடுலாக கொண்டாடும் கூகுள்