உள்நாடு

ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷிக்கும் இடையிலான கலந்துரையாடல் சில நிமிடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜப்பானின் டோக்கியோவில் ஆரம்பமாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு டோக்கியோவை சென்றடைந்தார்.

அங்கு, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் இன்று (27) ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு இறுதிச்சடங்குக்குப் பிறகு நடைபெறும் இந்த அரசு இறுதிச் சடங்கு குறித்து உலக மக்கள் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்று நடைபெறவுள்ள ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்குகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அரச தலைவர்கள் ஜப்பான் வந்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பங்கேற்காவிட்டாலும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக இரண்டாம் எலிசபெத்தின் அரச குடும்பத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத அவுஸ்திரேலியா பிரதமர், சிங்கப்பூர் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் டோக்கியோ வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

ஷின்சோ அபேயின் அரச வணக்க நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் பல அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி நாளை பிலிப்பைன்ஸ் செல்ல உள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது

4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திகதி நாடாளுமன்றுக்கு