(UTV | கொழும்பு) – இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் தரம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தரமற்றது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும், லக்ஷபான சரிவு, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் மற்றும் நீர் முகாமைத்துவத்திற்கு மின்சார சபையிடம் போதிய நிதி இல்லாமை காரணமாக மின்சாரத் தடையை நீடிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.