உலகம்

இத்தாலியில் முதல் பெண் பிரதமர் ஆவாரா ஜார்ஜியா மெலோனி?

(UTV |  ரோம்) – இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட மரியோ டிராகி, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதை தொடர்ந்து அங்கு பொதுத்தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி 600 உறுப்பினர்களை கொண்ட இத்தாலி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சுமார் 60 ஆயிரம் வாக்கு சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். உள்ளூர் நேரப்படி இரவு 11 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.

தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான ‘பிரதர்ஸ் ஆப் இத்தாலி’ கட்சியின் சார்பில் போட்டியிடும் பெண் அரசியல்வாதியான ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் வெற்றி பெறும் பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக பதவியேற்பார். இதன் மூலம் இத்தாலியின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெறுவார்.

Related posts

இந்தியாவில் 2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

பதவிப் பிரமாண நிகழ்ச்சி மிகவும் எளிமையாக

ரஷ்யாவை அச்சுறுத்தும் பைடன்