விளையாட்டு

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

(UTV | புதுடெல்லி) – ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.

அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன. ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ம் திகதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிதொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம்:-

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா தாகூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே

Related posts

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை வாகன விபத்தில் பலி

உலகறிந்த குத்துச்சண்டை வீரர் ஹாக்லர் காலமானார்

அரசியல் பிரவேசம் குறித்து சங்கக்காரவின் முடிவு