உள்நாடு

அரசிற்கு மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை

(UTV | கொழும்பு) – நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொல்கஹவெல குருநாகல் புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு போக்குவரத்து துறை அமைச்சர் மேலும் கூறியதாவது: நாட்டின் வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தொகையை அதிக அளவில் செலுத்த முடியாத நிலை உள்ளது.

அதற்கு உதாரணங்களைத் தெரிவித்த அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிதி ஒழுக்கத்தை பேண வேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பணம் கட்டமைக்க முடியாது எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.

Related posts

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே தின கூட்டத்தில் அறிவிக்கப்படும் – SLPP

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் நாமல்