உள்நாடு

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களைப் பெற்ற பின்னர், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவி குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று அவர் கூறுகிறார்.

சர்வதேச நிதி நெருக்கடியின் எதிர்கால வேலைகளுக்கு கடன் வழங்குநர்களிடமிருந்து ஒப்பந்தம் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் முதற்கட்டமாக மின்சார கட்டணங்கள், எரிபொருள் விலைகள் மற்றும் வரிகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் இரண்டாம் கட்டமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை போன்ற நிறுவனங்களை மறுசீரமைக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அது சமூகத்திற்கு வேதனையளிக்கும் எனவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை!

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை