உள்நாடு

கரையோர ரயில் பாதையில் ரயில்கள் தடம்புரள்வது ஏன்?

(UTV | கொழும்பு) – அண்மைக்காலமாக கரையோர ரயில் பாதையில் ரயில்கள் தொடர்ச்சியாக தடம்புரள்வதை காணக்கூடியதாக உள்ளது.

நேற்றைய தினமும் கொழும்பில் இருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதமானது பொதுச்செயலாளர் அலுவலக ரயில் நிலைய அருகில் தடம்புரண்டிருந்த நிலையில் தற்போது குறித்த பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வாரம் இரண்டு தடவைகள் கொள்ளுப்பிட்டிக்கும் கொம்பனித் தெருவுக்கும் இடையில் புகையிரதங்கள் தடம் புரண்டன.

இதேவேளை, கரையோரப் பாதையில் ரயில் தடம் புரண்டதற்கு தண்டவாளங்கள் பழுதடைந்தமையும், இன்ஜின்கள் பராமரிப்பின்மையும் காரணம் என தெரியவந்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து வாதுவை வரையான புகையிரத பாதையின் தண்டவாளங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக புகையிரத பாதைகளை கொள்வனவு செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு மீண்டும் பிடியாணை