உள்நாடு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை இரங்கல்

(UTV | கொழும்பு) – 1952 மற்றும் 1972 க்கு இடையில் நாட்டின் அரச தலைவராக இருந்த மாட்சிமை ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இலங்கை இன்று இரங்கல் தெரிவிக்கிறது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, அரசு இன்று துக்க தினமாக அறிவித்து அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை அளித்துள்ளது.

மகாராணியின் இறுதிச் சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் உலகெங்கிலும் உள்ள பல நாட்டுத் தலைவர்கள் உட்பட 2000 க்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள்.

ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் செப்டம்பர் 8 ஆம் திகதி தனது 96 வயதில் பால்மோரலில் காலமானார்.

இதேவேளை, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் காலமானதை முன்னிட்டு இன்றைய தினம் துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஜனாதிபதியுடன் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.

பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவும் நேற்று மாலை வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மறைந்த மகாராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அரச தலைவர் மற்றும் முதல் பெண்மணியுடன் இணைந்து கொண்டார்.

இதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சனிக்கிழமை லண்டனை வந்தடைந்தார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவை, வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தியா மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல் இயக்குநரகத்தின் பணிப்பாளர் திரு பென் மெல்லர், பிரதி லெப்டினன்ட் திரு டேவ் ஈஸ்டன், மன்னரின் சிறப்பு மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் வரவேற்றனர்.

Related posts

ஒக்டோபர் முதல் வாரத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

கிராம உத்தியோகத்தர்களை JPகளாக்க வர்த்தமானி!

ஆசிரியர்கள் மற்றும் கல்வியியல் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்