உள்நாடு

மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்ற அறிவிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று அறிவித்தல் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் தனிப்பட்ட முறைப்பாட்டின் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பெயரிட நீதிவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.

அலட்சியத்தால் ஏற்பட்ட மரணங்கள் என்ற அடிப்படையில், அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக இந்த தனிப்பட்ட மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Related posts

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

தரம் 5 – பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவையில் தாமதம்