உலகம்

உக்ரைன் ஜனாதிபதியின் கார் விபத்து

(UTV |  உக்ரைன்) – உக்ரைன் ஜனாதிபதி விலாடிமிர் ஜெலென்ஸ்கி பயணித்த கார் அந்நாட்டு தலைநகர் வீதியில் விபத்துக்குள்ளானது.

மோதல் பிரதேசங்களை அவதானித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அவர் பயணித்த வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதியுள்ளது.

விபத்தில் ஜனாதிபதிக்கு பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மற்றைய வாகனத்தின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் விபத்து குறித்து விசாரணையை தொடங்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பாகிஸ்தானின் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம்

சீனாவில் விமான சேவைகள் இடைநிறுத்தம்

இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் இன்று