உள்நாடு

சேறு பூசும் பிரச்சாரம் தொடர்பில் ஹரின் CCID இல் முறைப்பாடு

(UTV | கொழும்பு) –   சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் தம்மைப் பற்றிய பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) முறைப்பாடு அளித்துள்ளார்.

சிசிஐடிக்கு அவர் அளித்த முறைப்பாட்டில், போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டுகள், தன்னை “Professional Group SJB” என அழைக்கும் குழுவால் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மல்ஷா குமாரதுங்க மற்றும் தனது பெயர்களை அவதூறு செய்யும் வகையில் வட்ஸ்அப் ஊடாக பகிரப்படும் செய்திகள் காணப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

சில குழுக்களால் சமூக ஊடக தளங்கள் ஊடாக தமக்கு எதிராக தொடர்ச்சியாக சேறு பூசும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சுட்டிக்காட்டினார்.

வாட்ஸ்அப் செய்தியில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று கூறிய அவர், இது குறித்து சிசிஐடி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – நிதியை விடுவிக்கும் உரிமத்தில் கையொப்பமிட்ட ஜனாதிபதி அநுர

editor

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

கொரோனாவால் தொழிலை இழந்த தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு [VIDEO]