உள்நாடு

தாமரை கோபுரம் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக

(UTV | கொழும்பு) – தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை (15) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை உள்ளூர் முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லோட்டஸ் டவர் முதலீட்டில் இணைந்துள்ளதுடன், 22 முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 15 வெவ்வேறு திருவிழாக்களுக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிறைவடைந்துள்ளதுடன், சீன நிறுவனம் வழங்கிய கடனை செலுத்தும் பணியை 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரம் நாளை முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், 500 ரூபா மற்றும் 2000 ரூபா கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல முடியும்.

வெளிநாட்டவர்களுக்கு டிக்கெட் கட்டணம் 20 அமெரிக்க டாலர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இதுவே உண்மையான வரவு செலவு திட்டம் -நன்றி கூறும் ரூபன் பெருமாள்.

பால் மா விலையும் உயரும் சாத்தியம்

ரஞ்சன் நீதிமன்றில் ஆஜர்