(UTV | கொழும்பு) – வெள்ளவத்தை கடலில் சுமார் 40 முதலைகள் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை கடலில் நீராடச் சென்ற கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவன ஊழியர்கள், முதலை குட்டி ஒன்றை பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சவோய் தியேட்டர் அருகே உள்ள கால்வாயில் நான்கு பெரிய முதலைகள் காணப்பட்டதுடன். வெள்ளவத்தை பிரதேசத்தில் 40 முதலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த முதலைகள் தொடர்பில், கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவனம் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே வெள்ளவத்தை மற்றும் அதனை அண்மித்த கடற்பகுதிக்கு செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.